ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரி தேவி ஆலய திருப்பணி

ஆலய திருப்பணிக் குழு

வேதாந்த ஸ்வரூப விராட் ஸ்ரீ விஸ்வகர்ம பரப்பிரம்மனே நமஹ! ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரிதேவி திருக்கோயில் திருப்பணி வேண்டுகோள்!

ஸ்தபதிஸ் தாபகஸ்சைவ - ஆச்சார்யோ விஸ்வகர்மண : !

ஸ்கந்த மஹா புராணம் பதிவு செய்கிறது விஸ்வகர்மர்களைப் பற்றி ஸ்தபதி என்று ஸ்தாபனம் செய்ய கூடியவர்கள் அதாவது நிர்மாணம் செய்பவர்கள் ஒரு வஸ்துவை ஸ்தாபித்தல் அதாவது படைத்தல் இந்த படைக்கும் தொழிலைச் செய்பவர்கள் ஆச்சாரியார்கள் என்றும் அவர்கள் விஸ்வகர்மர்கள் ஆவார்கள் என்று கூறுகிறது. அந்த ஆச்சாரியார் என்று சொல்லக்கூடிய விஸ்வகர்மர்கள் ஆதி ப்ரம்ம குலத்தில் உதித்தவர்கள் ஆவார்கள் என்று கூறுகிறது. இதிலிருந்து நாம் ஆதி ப்ரம்ம குலம் என்று தொன்று தொட்டு மரபு வழியாக பயணித்து வருகின்றோம். இவ்வாறு சிறப்பு பெற்ற விஸ்வகர்ம குலம் அவர்களுடைய தந்தையாக தாயாக வழிபாடு செய்வது ஸ்ரீ விஸ்வ பிரம்மனும் ஸ்ரீ காயத்ரிதேவியும் ஆகும். இதுவே நமது பாரம்பரிய வழிப்பாட்டு முறையை உருவாக்க நல்லதொரு ஆலயத்தை அமைத்திட ஒன்றிணைந்து மிகச்சிறந்த ஆலயத்தை உருவாக்கிடுவோம்.

ஆலயம் ஏன் எதற்கு?

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற வாக்கிற்கினங்க ஆலயத்தை அமைப்பதின் மூலம் மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு ஒரு சக்தியை வஸ்துவை மனிதன் உணர்ந்து கொள்ள அமைப்பது ஆலயம் ஆகும். முற்காலத்தில் ஆலயம் தான் மனித வாழ்க்கைக்கு அடிப்படை தேவைகளை மற்றும் வாழ்வாதாரத்திற்கும் ஆலயமே மூலகாரணமாக இருந்தது. நமது ஐந்தொழில்களுக்கும் ஆதார சக்தி ஆலயம் ஆகும். ஜுவ ப்ரம்ம ஐக்கிய தத்வத்தை ஆலயத்தின் மூலம் மனித சக்திற்கு புலப்படாத அரிய மெய் ஞானத்தை எளிமையான முறையில் விஞ்ஞான பூர்வமாக புரிய வைக்கும் தளம் தான் ஆலயம் ஆகும். இந்த பிரபஞ்சத்தை படைத்த கடவுள் விஸ்வகர்மா என்று படைப்பின் காரணமாக விளங்குவதால் காரணப்பெயராக வேதம் போற்றுகிறது. சிருஷ்டிக்கு முன்பு பரப்ரம்மம் ஆகவும் விஸ்வப்ரம்மம் என்றும் வேதமும் ரிஷிகளும் போற்றுகின்றனர். அந்த விஸ்வப்ரம்மம் என்று போற்றக்கூடிய ஆற்றலுக்கு சக்தியாக உணர்வாக அறிய வைப்பது ஸ்ரீ காயத்ரிதேவி ஆகும். இவ்வாறு அதி உன்னதமான இறைவனுக்கு ஆலயம் அமைக்கும் போது பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் தனது ஆற்றலை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஏதுவாகிறது. பிரபஞ்சம் நிலை நின்றால் மனித வாழ்க்கையும் நிலை நின்று சீராக வாழ்க்கைப் பயணம் நடைபெற உதவுகிறது.

இப்படி பெருமை வாய்ந்த ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரிதேவியின் நேரடி வம்சாவழியான விஸ்வகுல சொந்தங்களுக்கு, நம்மை படைத்த அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரிதேவி | மற்றும் உள்ள பரிவார தெய்வங்களுக்கு தென்னிந்திய அளவில், மிகப்பெரிய ஆலயம் கோவை மாவட்டத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்பதை நமது விஸ்வகுல சொந்தங்களுக்கு | தெரிவித்துக்கொண்டு இந்த ஆலய திருப்பணியை மொழி பாகுபாடு இன்றி விஸ்வகர்மா என்ற | ஒற்றை வாக்கியத்தில் நாம் அனைவரும் இணைந்து ஆலயத்தை கட்டுவதற்கு தங்களால் ஆன நன்கொடையை ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரிதேவி அறக்கட்டளையின் வங்கி கணக்கிலோ | GPAY, PAYTM, PHONPE அல்லது QR CODE SCAN செய்து நன்கொடையைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

SHRI VISHWAKARMA JAGADGURU PEEDA
ARAMANDANAHALLI VISHWAKARMANA BHRAHMANA MAHA SAMSTANA MATA KARNATAKA

உலகமெங்கும் வாழும் விஸ்வகர்மா மக்களை வருக வருக என வரவேற்கும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள்

பிரம்மஸ்ரீ சற்குணம் ராஜேந்திரன் ஆச்சாரியார் (தலைமை கௌரவ ஆலோசகர்)

பிரம்மஸ்ரீ D. முருகேசன் ஆச்சாரியார் (நிறுவனர்)

பிரம்மஸ்ரீ D. செல்வராஜ் ஆச்சாரியார் (தலைவர்)

பிரம்மஸ்ரீ P. பாண்டி ஆச்சாரியார் (செயலாளர்)

பிரம்மஸ்ரீ R. சிவமணி ஆச்சாரியார் (பொருளாளர்)

பிரம்மஸ்ரீ D. செந்தில்குமார் ஆச்சாரியார் (ஆலோசகர்)

பிரம்மஸ்ரீ D. முத்துராமலிங்கம் ஆச்சாரியார் (அறங்காவலர்)

பிரம்மஸ்ரீ V. தங்கவேல் ஆச்சாரியார் (அறங்காவலர்)

பிரம்மஸ்ரீ R.கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியார் (அறங்காவலர்)

பிரம்மஸ்ரீ D. மனோகரன் ஆச்சாரியார் (அறங்காவலர்)

நிர்வாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் (நிர்வாக சபை) பிரதிநிதியாளர்கள்

1. பிரம்மஸ்ரீ V. N.அருண்குமார் ஆச்சாரியார்

2. பிரம்மஸ்ரீ M.ரிக் ரவி ஆச்சாரியார்

3. பிரம்மஸ்ரீ L.நாமத்தேவன் ஆச்சாரியார்

4. பிரம்மஸ்ரீ B.வெங்கடாசலம் ஆச்சாரியார்

5. பிரம்மஸ்ரீ K.திருஞானகணேஷ் ஆச்சாரியார்

6. பிரம்மஸ்ரீ K.சுரேஷ்குமார் ஆச்சாரியார்

7. பிரம்மஸ்ரீ P.ரவிக்குமார் ஆச்சாரியார்

8. பிரம்மஸ்ரீ R.ஸ்ரீதர் ஆச்சாரியார்

9. பிரம்மஸ்ரீ R.மணிகண்டன் ஆச்சாரியார்

10. பிரம்மஸ்ரீ V.பாலகிருஷ்ணன் ஆச்சாரியார்

11. பிரம்மஸ்ரீ A.செந்தில்குமார் ஆச்சாரியார்

12. பிரம்மஸ்ரீ D.சுப்பிரமணியம் ஆச்சாரியார் 

13. பிரம்மஸ்ரீ A.ரகுபதி ஆச்சாரியார்  

14. பிரம்மஸ்ரீ B.அருள்ஞானகணேஷ் ஆச்சாரியார் 

15. பிரம்மஸ்ரீ S.மகேந்திரபூபதி ஆச்சாரியார்

16. பிரம்மஸ்ரீ M.உமா பழனிச்சாமி ஆச்சாரியார்

மேலும் பிரதிநிதியாளர்கள் இணைவார்கள்.

பிரம்மஸ்ரீ M.முகுந்தன் ஆச்சாரியார் (இணையதள ஒருங்கிணைப்பாளர்)

Scroll to Top