ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரி தேவி அறக்கட்டளை
அரசு பதிவு எண் : 246 / 2022
ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரி தேவி அறக்கட்டளை விஸ்வகர்மா மக்கள் நலன் கருதி ஆலயப்பணி, கல்விச்சேவை, மருத்துவ சேவை முதியோர் நலன்களுக்காக உருவாக்கப்பட்டது. அனைவரும் ஆதரவு தாரீர்!!!
ஆலயம்
மருத்துவம்
கல்வி
Recent Update
ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரி தேவி அறக்கட்டளை உருவானது பற்றி நிறுவனரின் சிறு விளக்கம்
ஓம் ஸ்ரீ விராட் விஸ்வபிரம்மனே நமஹ!
என் பெயர் D.முருகேசன் சரவணம்பட்டி விநாயகபுரத்தில் வசித்து வருகிறேன். மேலும் நான் விஸ்வகுல சொந்தங்களுக்காக ஸ்ரீ முருகன் மணமாலை என்ற ஸ்தாபனத்தை உருவாக்கி ஜாதக பரிவர்த்தனை செய்து வருகிறேன். என்னுடைய நீண்ட நாள் கனவு எப்படியாவது நம் இனத்திற்கு ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரி தேவி ஆலயம் மிகப்பெரிய அளவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கவேண்டும் என்பது. ஆந்திராவில் இருக்கிறது கேரளாவில் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
நம் விஸ்வகுல சொந்தங்களின் ஆதரவோடு ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரி தேவி ஆலயம் கட்டலாம் என்று முடிவெடுத்து உடனடியாக அறக்கட்டளை சாமி பெயரிலேயே ஆரம்பித்து தமிழ்நாடு அரசில் முறையாக 15-11-2022 அன்று பதிவு செய்து பதிவெண்ணும் (246/2022) வாங்கி இப்பொழுது சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இந்த இணையத்தளம் மூலம் அனைத்து சொந்தங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் 10 பேர் கொண்ட அறங்காவலர் குழுவினர் போடிநாயக்கனூர், சின்னமனூர், சிலமரத்துப்பட்டி, தேனி நகரங்களுக்கு சென்று நம் சொந்தங்களிடம் ஆலயப்பணிக்கு ஆதரவு திரட்டினோம். அவர்கள் அனைவரும் இடம் தேர்வு செய்து வாருங்கள். கண்டிப்பாக நாங்கள் நிதி வழங்குகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இப்படி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரங்களுக்கும் சென்று நம் சொந்தங்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறோம். இணையதளம் மூலமும் ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரி தேவி ஆலயப்பணிக்கு ஆதரவு திரட்டுகிறோம்.
அனைவரும் வாருங்கள்!ஆதரவு தாருங்கள்!! ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரி தேவி ஆலயத்தை சிறப்பாக விரைவில் கட்டி முடிப்போம்!!!
நன்றி வணக்கம்.
ஜெய் ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரி தேவி அம்பாளே போற்றி! போற்றி!!
ஸ்ரீவிஸ்வகர்மா காயத்ரிதேவி அறக்கட்டளை கொள்கைகள்:
1.முதல்படியாக தென்னிந்தியாவில் உள்ள விஸ்வகுல மக்கள் மொழி வேறுபாடின்றி ஒன்று கூடி ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ காயத்ரி தேவி அம்பாள் மற்றும் உள்ள பரிவார தெய்வங்கள் மற்றும் ஆலயங்கள் பராமரித்தல்.
2.நமது சமுதாயம் மற்றும் பொது மக்களின் பொது நலம், சமூக மேம்பாடு, கல்வி, கலாச்சார முன்னேற்றத்திற்கு சாத்தியமான அனைத்து சேவைகளையும் வழங்குதல்.
3.பொது விழாக்கள் கொண்டாடுதல், சமூக மையங்கள், மண்டபகங்கள், ஆடிட்டோரியங்கள் நிறுவுதல் மற்றும் பராமரித்து வருதல்.தொண்டு நிறுவனங்கள், வேதகல்வி கற்பிப்பதற்கும் கல்வி கருத்தரங்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள், மாநாடுகள் நடத்துதல் அதற்கு தேவையான நிதியளித்தல்.
4. பொது மருத்துவ முகாம்கள் பொது சுகாதாரத்தை மேம்பாடு செய்தல் மாணவர்கள், குழந்தைகள் மற்றும் ஏழை மக்களின் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்துதல்.
5.நன்கொடைகள் வசூலித்தல். பள்ளிகள்,கல்லூரிகள் மேம்பாடு செய்து பராமரித்தல்.
6. சமூக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் , திட்டங்கள் நிறைவேற்றுதல் மற்றும் அறக்கட்டளை விதிமுறைகளை பின்பற்றி அரசு விதிகளுக்கு உட்பட்டு நடத்தல்.

சங்ககால சிற்ப சித்தர் மாமுனி
"மயன்"
ஆலமா மரத்தின் கீழே அருள்மயன் அமர்ந்த தாலே
ஆலமா மரத்தின் கீழே அருட்கலை வளர்ந்த தாலே
ஆலமா மரத்தின் கீழே அறிவர்கள் வளர்ந்த தாலே
ஆலயம் ஊரூர் தோறும் அமைந்தன செழிக்கநன்றே!
– வி.கணபதி ஸ்தபதி
